``எனக்கு இது போதும்.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை’’ - CM ஸ்டாலின் இப்படியும் பேசுவாரா?

x

தந்தை பெரியார் பயன்படுத்தி வந்த கைத்தடியைத் தமிழக முதலமைச்சருக்குப் பரிசாகத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழங்கியுள்ள நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தந்தை பெரியரின் நினைவு நாளில் தனக்கு வழங்கப்பட்ட பரிசிற்கு ஈடு இணை எதுவும் இல்லை எனத் தமிழக முதலமைச்சர் கூறியது சுமார் 100 ஆண்டு கால சிறப்பு மிக்கது

“திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும்“

தனக்கு அளிக்கப்பட்ட பரிசின் மூலமாகத் தன்னையே தான் மறந்து நிற்பதாக அவர் கூறினார்

பெரியார் இல்லாமல் நவீன தமிழக வரலாறு கிடையாது என்று சொல்லும் அளவிற்குப் பல தளங்களில் புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார். சாதிய கட்டமைப்புகளைத் தகர்த்து எறிந்து சுய மரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி உள்ளிட்ட அறிவு ஆயுதங்கள் கொண்டு தமிழக மக்களையும் அரசியலையும் மேம்படுத்தியவர் பெரியார்.

நூறாண்டுகளுக்கு முன் இந்தியா சுதந்திர தாகத்திலிருந்த போது தமிழகத்தில் சாதிய சமூக கட்டமைப்புகளில் சிக்கி இருந்த அடித்தள மக்களை மீட்பதற்காக அவர் எடுத்த போராட்டங்களை வேறு எந்த தலைவர்களும் வரலாற்றில் மேற்கொண்டது கிடையாது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்

அவர் மறைந்த பின் அந்த இயக்கத்தைத் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அதை உயிர்ப்புடன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் பெரியாரின் 51வது நினைவு நாள் பெரியார் திடலில் அனுசரிக்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர் பெரியார் கணினி ஆய்வக நூலகத்தைத் திறந்து வைத்தார். அப்போது வீரமணி முதலமைச்சருக்குத் தந்தை பெரியார் பயன்படுத்தி வந்த கைத்தடியைப் பரிசாக வழங்கியது முதல்வரைத் திக்குமுக்காடச் செய்தது.

ஏற்கனவே தந்தை பெரியார் படத்தில் நடித்த நடிகர் சத்தியராஜுக்குப் பெரியார் பயன்படுத்திய மோதிரத்தை வீரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அந்த விழாவில் கலந்து கொண்ட மறைந்த முதல்வர் கருணாநிதி பெரியாரின் மோதிரம்

எங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் சத்தியராஜுக்குக் கிடைத்ததில் எனக்கு கொஞ்சம் பொறாமை தான் என்று குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்