"ஆணவம் வேண்டாம்..!" தமிழிசை X தளத்தில் பரபரப்பு ட்வீட் | MK Stalin | BJP

x

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்தான கேள்விக்கான முதலமைச்சர்

ஸ்டாலினின் பதிலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம் என்றும், பாமக தலைவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றார்.

2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது, யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும் என்றும், யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை, யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்