``தமிழகம் முழுவதும்'' அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு... அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி
தொடர் மின்தடை தொடர்பாக வரும் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் பிரச்சினைகளை சரிசெய்ய, அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அதில், அதிக புகார்கள் கொண்ட இடங்களில் மேற்பார்வை பொறியாளர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்திய அமைச்சர், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள துணை மின் நிலையங்களில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட இடங்களில் அதற்கான காரணத்தை கண்டறிந்து சீர்செய்ய அமைச்சர் அறிவுறுத்தினார். மின் சேவை மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார்.