``சுத்திகரிப்பு நீரை ஆற்றிலேயே விடலாமா..?’’ - அமைச்சர் கே.என்.நேரு

x

கழிவுநீரை சுத்திகரித்தால் 100 லிட்டரில், ஆறு முதல் ஏழு லிட்டர் மட்டுமே கழிவுநீராக இருக்கும் என்றும், அதிலிருந்து பெறப்படும் 94 லிட்டர் நீர் நல்ல நீராகத்தான் இருப்பதாகவும், சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதாகவும், ஆனால், நமது மக்கள் சுத்திகரிக்கப்பட்டு வழங்கும் நீர் தங்களுக்கு வழங்க வேண்டாம் என்று கூறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் நல்ல நீர்தான்.... அதை ஆற்றிலேயே விடலாமா..? அல்லது விவசாயத்திற்கு வழங்கலாமா என்பது குறித்து அந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்