"நீ கேட்டு நான் இல்லை என சொல்வேனா?".. சட்டப்பேரவையில் சிரிப்பலையை எழுப்பிய அமைச்சர் துரைமுருகன்

x

சட்டப்பேரவையில் மயிலாப்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ, வேலு பேசும்போது, தனது தொகுதியில் 3 கிலோ மீட்டர் தூரம் செல்லும் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரித் தருமாறு கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னதாகவே சொல்லியிருந்தால் செய்துகொடுத்திருப்பேன் எனக் கூறினார். மேலும் நானோ முருகன், நீங்களோ வேலு என இருவரது பெயரையும் ஒற்றுமைப்படுத்தி பேசிய துரைமுருகன், நீங்கள் சொன்னால் செய்யாமல் இருந்துவிடுவேனா? என கலகலப்பாக பதில் அளித்தார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்