எஸ்.பி வேலுமணி நேருக்கு நேர் கேட்ட கேள்வி..அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த எதிர்பாரா பதில்
சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர் எஸ் பி வேலுமணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு சாலைகள் அமைக்க 300 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் பகுதியில் தடுப்பணை அமைத்து, நீர் எடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வெள்ளூர் குப்பை கிடங்கின் தற்போதைய நிலை குறித்து ஆணையரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Next Story