"40 கூட தேறாது.. வெறும் போட்டோ தான்" - இறங்கி அடித்த மம்தா.. ஷாக்கில் ராகுல்
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெறுவதே சந்தேகம் தான் என, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.மேற்குவங்கத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை விடுவிக்காததை கண்டித்து கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. இதில் பேசிய மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தான் விரும்பியதாகவும், ஆனால், தான் ஒதுக்கிய தொகுதிகளை அவர்கள் நிராகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். 2 தொகுதிகள் போதாது என்றால், 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடலாம் என்றும் மம்தா தெரிவித்தார். ஹிந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க.வை காங்கிரஸ் நேரடியாக எதிர்கொள்ளலாம் என்றும், மக்களவைத் தேர்தலில் 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதே சந்தேகம் தான் என்றும் மம்தா தெரிவித்தார். மேற்குவங்கத்தில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை, குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வாக உள்ளதாக மம்தா விமர்சித்தார்.