வீழ்ந்த மண்ணில் விஸ்வரூபம்- 'மகா' வெற்றிக்கு பாஜக ஆடிய வியூகம்? கேம் சேஞ்சரான கடைசி ஒற்றை அறிவிப்பு

x

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மகா வெற்றியை வசமாக்கியது எப்படி...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

மகாராஷ்டிரா... 6 மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியை தழுவிய மாநிலம்..

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 30 இடங்களை வசமாக்க, பாஜக கூட்டணிக்கு 17 இடங்கள் கிடைத்தது. அன்றே ஷிண்டே- பாஜக அரசாங்கம் மக்கள் எதிர்ப்பலையை தணித்து, சட்டப்பேரவை தேர்தல் வெற்றி வியூகங்களை போட்டுவிட்டது. இதில் பிரதான இடம் பெற்றது பிரதமர் மோடி எதிர்த்த இலவச திட்டம்...

தேர்தல் நெருங்கவும் ஆகஸ்ட் மாதம் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கியது ஷிண்டே - பாஜக அரசு. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2,100 ரூபாய் வழங்குவோம் எனவும் அறித்தது.

விவசாயிகள் போராட்டத்தை கண்ட மாநிலத்தில், விவசாயிகளுக்கான மின் கட்டண நிலுவை தள்ளுபடி, பருத்தி, சோயாபீன்ஸ் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 5,000 மானியம், வெங்காய ஏற்றுமதி வரியை 40 %-த்தில் இருந்து 20 % ஆக குறைத்தது.

சாதிய சமன் கணக்கு, மாநில அரசியலில் செல்வாக்கு கொண்ட மராத்தா மக்களின் இட ஒதுக்கீட்டு போராட்டம், இப்போது பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்றே பார்க்கப்படுகிறது. மராத்தா இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவின் வாங்கு வங்கியான ஒபிசி பிரிவு வாக்குகளை ஓரணியில் திரட்டியிருக்கிறது.

விதர்பா வியூகம், மகாராஷ்டிராவில் யார்? ஆட்சி என்பதை தீர்மானிக்க வல்ல பிராந்தியம். ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூர் மையமாக கொண்ட பிராந்தியத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் மூன்றை மட்டுமே வென்றது பாஜக.

அப்போது ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற பேச்சும் இருந்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் அப்படியல்ல... ஆர்.எஸ்.எஸ் - தேவேந்திர பட்னாவிஸ் கரங்கள் வலுவாக இருந்தது. பெங்கால், அரியானாவில் பாஜகவுக்கு வெற்றி வியூகம் போட்ட கைலாஷ் விஜவார்க்கியா ஸ்பெஷலாக விதர்பாவில் பணியாற்றினார்.

பிரசாரம்.... பாஜகவின் பிரசார இயந்திரம் பக்காவாக இருந்தது. வாக்களிக்காத மக்களையும் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரும் அளவிற்கு பாஜக தொண்டர்களின் களப்பணி இருந்தது. உயர்மட்ட தலைவர்களும் பிரசாரத்தில் அதிதீவிரம் காட்டினர்.

பிரதமர் மோடி 10 பேரணிகளில் 106 தொகுதிகளை கவர் செய்ய, அமித்ஷா புயல் அங்கே மையம் கொண்டது. கூட்டணியில் ஷிண்டே, அஜித் பவார் பிரசாரமும் தீவிரமாக இருந்தது. இந்த உற்சாகம் எதிரணியில் இல்லை என்றே சொல்லாம். ராகுல் காந்தி 7 பிரசார கூட்டங்களிலே பிரசாரம் செய்தார்.

பாஜகவின் இந்துத்துவா பிரசாரம்... மோடி ஆட்சியில் மராட்டியத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு குஜராத் உயர்த்தப்படுகிறது என்ற பிரசாரத்தை தொடங்கியது காங்கிரஸ். இதனை ஆப் செய்யும் வகையில் இந்துத்துவா பிரசாரத்தை விடாமல் எடுத்துச் சென்றது பாஜக. நாம் பிளவுபட்டால், அழிக்கப் படுவோம் என்ற யோகி ஆதித்யநாத் முழக்கம் பிரசாரங்களில் பிரதான இடம் பெற்றது.

நாம் பிளவுப்பட்டால் பிளவுவாத சக்திகள் கொண்டாடும் என்றார் பிரதமர் மோடி. சிவாஜி மகாராஜா பற்றாளர்களா? அவுரங்கசீப்பை போற்றுபவர்களா? என ஆட்டத்தை தன்வசமே வைத்திருந்தார் பிரதமர் மோடி.

இலவச அறிவிப்புகள்.. பக்காவான பிரசாரங்களால் எதிர்ப்பலையை உடைத்து, காங்கிரஸ் கூட்டணியை ஓரங்கட்டி மகா வெற்றியை வசமாக்கியிருக்கிறது பாஜக...


Next Story

மேலும் செய்திகள்