ஓட்டுக்கு காசு கொடுத்தது போய் இப்போது ஓட்டுக்கு ஆஃபர் - அடுத்த லெவலுக்கு போன மகாராஷ்டிர அரசியல்
வருகிற 20ஆம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வருகிற 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மகாராஷ்டிராவில் உள்ள பி.வி. ஆர்., ஐநாக்ஸ், சினிபோலிஸ் உட்பட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வாக்காளர்களுக்கு 20 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பிரபல உணவகங்களில் வாக்காளர்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரையும், சில்லரை வணிகத்தில் 20ஆம் தேதி மட்டும் 10 முதல் 15 சதவீதம் வரை சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story