நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை

x

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில், தமிழ்நாட்டின் வாக்கு சதவீதம் குறைந்ததை சுட்டிக்காட்டி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வாக்களிக்காத சுமார் ஒரு கோடியே 90 லட்சம் பேர், மத்திய - மாநில அரசுகளின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்களோ என எண்ண தோன்றுவதாக தெரிவித்துள்ளார். சொந்த ஊரில் ஓட்டுப்போட வேண்டியவர்கள், போக்குவரத்து கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் வாக்களிக்க செல்லவில்லை என்றும், சென்னையில் வசிக்கும் வசதியானவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஓட்டு போட்டால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ள பிரேமலதா, தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் வாக்களிப்பதின் அவசியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்