மத்திய அமைச்சர் எல்.முருகன் போடும் புது பிளான் | l murugan

x

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையைச் சேர்ந்த முக்கிய நிபுணர்களை சந்தித்தார். அப்போது 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, பிலிம் பஜார் - 2024 மற்றும் ‘வேவ்’ உச்சி மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது திரைப்படத் தயாரிப்பு, டிஜிட்டல் உருவாக்கம் மற்றும் ஊடக தொழில்நுட்பத்தில் முதலீட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பிப்ரவரி மாதம் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் வேவ் உச்சி மாநாடு ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறைக்கு ஒரு முக்கிய தளமாக விளங்கும் என்று எல்.முருகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்