சட்டப்பேரவை சம்பவம் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்
தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக ஆளுநருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்களின் நலனுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து, தேச விரோதமாக நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் தமிழக ஆளுநருடன் முரண்பட்டு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் போக்கை கைவிட வேண்டும் எனவும் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Next Story