``அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி திட்டங்கள் அறிவிப்பு'' - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்
மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாராபட்சமின்றி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு மூவாயிரத்து 432 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஜிப்மர் மருத்துவமனைக்கு தனியாக ஆயிரத்து 450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரிக்கு எந்த ஒரு நிதி நெருக்கடியும் இல்லை எனவும், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story