"எல்லா இடத்துலயும் நடக்குது..ஜாக்கிரதையாய் இருக்கணும்.." - மனம் உடைந்து சொன்ன நடிகை

x

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து இருப்பதாகவும், அதே நேரத்தில் பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும், நடிகை லதா வேதனை தெரிவித்தார். சென்னையில் த.மா.கா சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை லதா, தனது காலத்தில் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகளை தான் சந்தித்தது இல்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்