இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-10-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் வருத்தத்திற்கு உரியது...

இந்திய பாதுகாப்பு முகமைக்கு அறிவுரை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...


ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டிய 5 பேரிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்...

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதி...


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி உள்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம்...

2018ல் நடந்த துப்பாக்கி சூடு குறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் நடவடிக்கை...


17 ரவுண்டுகள் சுட்ட காவலர் சுடலைக் கண்ணு மீது கடும் குற்றச்சாட்டு...

உயிரிழந்த 13 பேரில், 7 பேரை காவலர் சுடலைக்கண்ணு சுட்டார் என ஆணையம் கூறியிருந்த நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கை...


ஆய்வாளராக இருந்த திருமலை, காவலர்கள் சங்கர், சுடலைக் கண்ணு, சதீஷ்குமார் மீது நடவடிக்கை...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ விவகாரத்தில் அதிரடி...


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடரும் அதிரடி

தாசில்தார்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் எய்தவர்களை விட்டு விட்டு, அம்புகள் மீது நடவடிக்கை எடுப்பதை, அரசு பரிசீலிக்க வேண்டும்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்...


சென்னை, கோவை மதுரை, தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் களைகட்டியுள்ள தீபாவளி விற்பனை...

புத்தாடை, இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்க கடைகளில் குவிந்த பொதுமக்கள்....


தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கிய பொதுமக்கள்...

சென்னையில், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம்...


பல மடங்கு கட்டண உயர்வால், வெறிச்சோடிய ஆம்னி பேருந்து நிலையம்...

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்த கட்டணத்தை விட பல மடங்கு உயர்த்தியுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு...


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...

அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...


சேலம் மாவட்டம் சிவதாபுரம் பகுதியில் ஏரி நிரம்பி உபரி வெளியேறியதால், வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்...

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி....


Next Story

மேலும் செய்திகள்