"அந்த கட்சில இருந்து தான் வந்துருக்கேன்..அவங்கள பத்தி நல்லா தெரியும்.." குஷ்பூ பரபரப்பு பேட்டி

x

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோயிலான செல்லத்தம்மன் கோயில் முன்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பேரணி நடத்துவதாக கூறிய பா.ஜ.க. வினர் அந்த கோயில் முன் திரண்டு நின்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி குஷ்பு மற்றும் பா.ஜ.க. மாநில தலைவி உமா ரதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை, சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆட்டுமந்தை மண்டபத்தில் அடைத்தனர். காலை 11.30 மணி அளவில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஆறரை மணி நேரத்திற்கு பின்பு குஷ்பு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

ஆட்டுக்குட்டிகள் இருந்த இடத்தில் தான் அடைத்து வைத்தார்கள், என்றும் எங்களது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்