7 முறை வெளிநாடு போன் கால்.. மீண்டும் சூடு பிடிக்கும் கொடநாடு- ஈபிஎஸ்ஸிடம் விசாரணையா?
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்ட நிலையில், அவர் இறப்பதற்கு முன் ஏழு முறை வெளிநாட்டில் இருந்து போன் வந்ததால் வெளிநாடு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து இன்டெர்போல் போலீசாரின் புலன் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிப்பது குறித்து குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் வாதிட வாய்ப்புள்ளது.
Next Story