இளைஞர்களை நல்வழிப்படுத்த உடற்பயிற்சி மையம்.. திறந்து வைத்தார் மனோ தங்கராஜ் | Kanniyakumari

x

குமரியில் போதைப்பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்கும் வகையில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உடற்பயிற்சி மையத்தைத் திறந்து வைத்தார்... போதைப் பழக்கத்தை விடுத்து உடல் நலனில் அக்கறை காட்டும் விதமாக புதுக்கடை பகுதியில் தனிநபர் ஒருவர் நவீன வசதிகள் கொண்ட உடற்பயிற்சி மையத்தைத் தொடங்கியுள்ளார்... இதனை முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்... அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது... தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களைப் பார்வையிட்ட மனோ தங்கராஜுக்கு உரிமையாளர் நினைவுப்பரிசு வழங்கினார்... இந்நிகழ்வில் ஏராளமான திமுகவினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்