கமல்ஹாசனை நேரில் சந்தித்த பின்.. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா போட்ட ட்வீட் | Kamal Haasan
மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா கூட்டணியில், முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து தேர்தல் களமாடும் மநீம கட்சி தலைவர் கமலை சந்தித்ததாகவும், மகத்தான வெற்றிப் பயணத்தின் தொடக்கம் இது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், நாடு காக்கும் ஒற்றை நோக்குடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் சந்திப்பு நடத்தியதாக கமல் பதிவிட்டுள்ளார்.
Next Story