ஏழுமலையான் கோயில் அன்னதானக் கூடம் கட்ட பூமி பூஜை - கட்டுமான பணியை தொடங்கி வைத்த ஈபிஎஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோவில் அன்னதான கூட பூமி பூஜையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். உளுந்தூர்பேட்டையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டுமான பணி 20 கோடி ரூபாய் மதிப்பில், 5 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. 2 கோடி ரூபாய் மதிப்பில், கோயில் அன்னதான கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை முன்னிட்டு, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. இதில், அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து, கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
Next Story