ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் - பாஜக தலைவர்கள் போட்ட ட்வீட்

x

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். , சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்கள் வளர்ச்சிக்கு தேவைப்படுகின்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி, சமூகநலனோடு வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடுமையான அரசியல் சூழ்நிலைகளை, துரும்பு என்று சமாளித்த இரும்பு பெண் ஜெயலலிதா என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்