ஜெ.பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? - செங்கோட்டையன் சொன்ன எதிர்பாரா பதில்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியோடு, 2026ல் தமிழகத்தில் சிறந்த ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, கோபிசெட்டிபாளையத்தில் அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், தொண்டர்களை ஊக்கப்படுத்த அந்தந்த மாவட்டங்களில் நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறினார். ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
Next Story