"கல் வீசியவர்களுக்கு எமலோகத்திற்கு டிக்கெட்" - யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு | Yogi Adityanath
- ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் பாஜகவுக்கு வாக்கு சேகரித்த யோகி ஆதித்யநாத், ஜார்க்கண்டின் மகள்கள் லவ் ஜிகாத் அபாயத்தில் இருக்கிறார்கள் என்றும் அதற்கு பாஜகவால் மட்டுமே சரியான பதிலடியை கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். மாநிலத்தில் ஹேமந்த் சோரன் - காங்கிரஸ் ஆட்சியில் காடுகள், பசு மற்றும் மணல் கடத்தல் மாபியாக்கள் செயல்படுவதாக குறிப்பிட்டார். ஜார்க்கண்ட் ரோகிங்கியாக்கள், ஊடுருவல்காரர்களுக்கான சத்திரமாகிவிட்டது என்றும் அராஜகத்தை பரப்புவதற்கு அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது எனவும் குற்றம் சாட்டினர். உத்தரபிரதேசத்தில் கல் எறிந்தவர்கள், மாபியாக்களுக்கு எல்லாம் எமலோகத்திற்கு டிகெட் கொடுத்துவிட்டோம் என்ற யோகி ஆதித்யநாத், இதுபோன்ற அதிரடி பதிலடிக்கு ஜார்க்கண்டியில் இரட்டை எஞ்ஜின் அரசு தேவை எனவும் தெரிவித்தார்.
Next Story