"சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு.." பரபரக்கும் தேர்தல் களம்.. சூடாக இருக்கும் ஜம்மு காஷ்மீர்

x

ஜம்மு காஷ்மீரில் நாளை முதல்கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெறுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 16 தொகுதிகளிலும், ஜம்முவில் 8 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 3,276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கும் முதல்கட்ட தேர்தலில், மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். மெகபூபா முப்தி மகள் இல்திஜா முப்தி களம் காணும் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு தேர்தல் நடக்கும் வேளையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்