“இது மோடியின் மல்டிபிளக்ஸ்...” - விமர்சித்த காங்...கொந்தளித்த ஜே.பி. நட்டா
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியின் மல்டிபிளக்ஸ் என அழைக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடம், உண்மையில் பிரதமரின் நோக்கங்களை தெளிவாகவே உணர்த்துவதாகவும் அதை மோடி மல்டிபிளக்ஸ் அல்லது மோடி மேரியட் என அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். புதிய வளாகம் வேதனையாகவும் துயரம் நிறைந்ததாகவும் இருப்பதாக தெரிவித்துள்ள அவர் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தனது சகாக்களில் பலரும் இதையே உணர்கிறார்கள் என, தாம் உறுதியாக நம்புவதாக ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். ஜெயராம் ரமேஷின் இந்த அறிக்கை குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, காங்கிரஸ் கட்சியின் இந்த இழிவான தரம்தாழ்ந்த, பரிதாப கரமான மனநிலையை காட்டுவதாகவும், இது 140 கோடி இந்தியர்களுக்கான அவமரியாதை என விமர்சித்துள்ளார்.