இந்தியாவுக்கான பணத்தை நிறுத்தி வைத்த ட்ரம்ப்.. மீண்டும் மீண்டும் சீண்டும் அமெரிக்கா

x

இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக பைடன் நிர்வாகம் வழங்கி வந்த நிதியை டிரம்ப் அரசு நிறுத்தியுள்ளது. அதிபராக பதவியேற்ற டிரம்ப், செலவினங்களை குறைப்பதற்காக, எலான் மஸ்க் தலைமையில் டி.ஓ.ஜி.இ., (DOGE) எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு குழுவை உருவாக்கினார். இந்த குழு, அமெரிக்கர்களின் வரிப்பணம் பல்வேறு நாடுகள், சர்வதேச நிறுவனங்களுக்கு செல்வதாக‌க் கூறி, அவற்றை நிறுத்தியுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் ஓட்டு சதவீத‌த்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதே போன்று, வங்கதேசம், நேபாளம், கம்போடியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட, நிதியையும் நிறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்