புத்தாண்டு தினத்தில்... பாமக வெளியிட்ட முக்கிய தகவல்
புத்தாண்டு தினத்தில் சென்னை பனையூர் அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி தொண்டர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அக்கட்சி அலுவலகம் சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் இயங்கி வருகிறது. தற்போது அந்த அலுவலகத்தைப் பற்றி அன்புமணி ராமதாஸ் எதையும் தெரிவிக்காமல், பனையூரில் உள்ள தனது அலுவலக அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பர்கிட்சாலையில் உள்ள அலுவலகத்திற்கு அன்புமணி இனி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமகவின் முழக்கங்களில் குடும்ப அரசியல் எதிர்ப்பு என்பது பிரதானமாக இருக்கிறது. அன்புமணியை தொடர்ந்து, ராமதாஸின் பேரனும் கட்சிக்குள் வந்திருப்பதால், இனி குடும்ப அரசியல் என்ற முழக்கத்தை கட்சி கைவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story