கனிமொழிக்கு பதிலடி? தமிழிலேயே ஆவேச பதிவிட்ட பவன் கல்யாண்
ஹிந்தி தொடர்பான நிலைப்பாட்டை அரசியலுக்காக தான் மாற்றியதாக கூறுவது, மொழி கொள்கை பற்றிய புரிதல் இன்மையை காட்டுவதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், தேசியக் கல்விக் கொள்கை, ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்ற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். மொழி தேர்வு மற்றும் கல்விச் சுதந்திரம் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்பதில் ஜனசேனா கட்சி உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story