"100 உயிர் இல்ல.. 1,000 உயிர்களையும் விட தயார்" - துணை முதல்வர் உதயநிதி ஆக்ரோஷம்
தமிழ் மொழி மற்றும் உரிமையை காக்க 100 பேர் அல்ல 1000 பேர் உயிரையும் விட தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அறிவிப்பை கண்டித்து, சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு மொழிப்போரை சந்திக்க தமிழகம் தயாராக இருப்பதாக கூறினார். மேலும், கட்சியின் பெயரில் அண்ணாவை வைத்து கொண்டு ஒதுங்கி நிற்காமல் தங்களோடு இணைந்து வீதிக்கு வாருங்கள் என அதிமுகவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story