முழு நிலவு மாநாடு - அழைப்பிதழ் வழங்கிய சௌமியா அன்புமணி
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள கனககிரி ஈஸ்வரர் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயக தலைவருமான சௌமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து மே 11ம் தேதி மாமல்லபுரம் அருகே நடைபெறும் பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டு அழைப்பிதழை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சௌமியா அன்புமணி நிழலை தேடி ஓடினார்.
Next Story
