"எச்சரிக்கையா இருங்க.. ஆனால் பயப்படாதீங்க.. பாதிக்கப்பட்டிருந்தால்.. இதை செய்யுங்கள்.." தொலைத் தொடர்புத்துறை கொடுத்த அட்வைஸ்

x

தொலைத் தொடர்புத் துறை அதிகாரி பேசுவதாக கூறி, வெளிநாடுகளில் இருந்து வாட்ஸ் அப் அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற அழைப்புகள் மூலம் இணையதள குற்றவாளிகள், இணையவழியில் குற்றங்களையும், நிதி மோசடிகளையும் அரங்கேற்ற முயற்சிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அளிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சந்தேகத்திற்குரிய மோசடி அழைப்புகள் வந்தாலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தாலும் இணையவழியில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தொலைத் தொடர்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்