ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அதிமுக எடுக்கும் முடிவு என்ன? | erode by election 2025 | AIADMK

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து அ.தி.மு.க. இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது. தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. தரப்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து ஆலோசித்து, அ.தி.மு.க. தமது முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்