ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இந்த தேதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் சந்திரகுமார்

x

ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், வரும் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு அசோகபுரம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி வீடு வீடாக வாக்குசேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் அல்லது துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் பிரசாரம் செய்வது குறித்து வரும் 20ம் தேதிக்குப் பிறகு முழு தகவல் வெளியிடப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்