``ஈபிஎஸ் உறவினர் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு''... 26 இடங்களில் நடந்த சோதனை IT ரெய்டில் தகவல்

x

ஈரோட்டில் ஈபிஎஸ் உறவினர் ராமலிங்கம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பிடிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ராமலிங்கம் ஈரோட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ராமலிங்க கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராமலிங்கத்திற்குத்

தொடர்புடைய 26 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருவில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவடைந்தது. இந்த நிலையில் வருமான வரி சோதனையில்10 கோடி ரூபாய் அளவிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் 750 கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோட்டை அடிப்படையாகக் கொண்ட கட்டுமான நிறுவனத்தில் இருந்து கணக்கில் வராத பணம் பத்து கோடி ரூபாயும் மற்றும் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்