"ஈபிஎஸ் கருத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும்" - மேடையில் கொந்தளித்து பேசிய அமைச்சர்
முதல்வரை தரக்குறைவாக பேசும் எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுத்து முறியடிக்க வேண்டுமென, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தி.மு.க சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் சேலம் கருப்பூரில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூன்று ஆண்டுகளில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என முழு சோற்றில் எடப்பாடி பழனிசாமி பூசணிக்காயை மறைப்பதாகவும்,
அவரது கருத்துக்கு நமது நிர்வாகிகள் பதில் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்து முறியடிக்க, ஐ.டி விங் நிர்வாகிகள் கொள்கை வீரர்களாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Next Story