ஈபிஎஸ் போஸ்டர்களை எரித்த பாஜகவினர்... ஏட்டிக்கு போட்டி.. தஞ்சையில் பரபரப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்திருந்தார். இதளை கண்டிக்கும் வகையில், தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக சார்பில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஏட்டிக்கு போட்டியாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத. அப்போது எடப்பாடி பழனிச்சாமியின் போஸ்டர்களை எரித்தும், செருப்பு மற்றும் துடைப்பதால் அடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது தீயணைப்பு துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story