விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த அதிமுக - இதுதான் அந்த பின்னணியா?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது, பாஜக கூட்டணியில் பாமக வெற்றியை எளிதாக்க மேலிடம் போட்ட உத்தரவாகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது பாஜக டெல்லி மேலிடம் உத்தரவாலே அதிமுக போட்டியிலிருந்து விலகுவதாக சிதம்பரம் மறைமுகமாக குற்றம் சாட்டியிருக்கிறார். தேர்தலில் பாமகவை முன்நிறுத்தி பாஜகவும், அதிமுகமாகவும் மறைமுகமாக களம் இறங்கியிருப்பதாகவும், இந்தியா கூட்டணி திமுக வெற்றியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
Next Story