``அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கேவலப்படுத்திய எடப்பாடி’’ - பறந்து வந்த நெத்தியடி பதிலடி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அதிக நிதி செலவிடபப்டுகிறது என கொச்சைப்படுத்தி கிண்டலடிப்பது தான்,எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் வாடிக்கையான கபட வேடம் என்று,திமுக விமர்சித்துள்து.
அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி,ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களைக் கேவலப் படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர்,ஆசிரியர்களைப் பார்த்து, "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால்,இன்றைக்கு அவர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருப்பதால்,ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்று தெரிவித்துள்ளது.
ஆட்சியிலிருந்தபோது தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில்,ஒரே கையெழுத்தில் 1,73,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததுடன், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும் கொடுமை செய்ததாக அதிமுக ஆட்சி என்றும் விமர்ச்சித்துள்ளது.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு அதிக நிதி செலவிடபப்டுகிறது என்று கூறி கொச்சைப்படுத்தி, கிண்டலடிப்பது எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் வாடிக்கையான கபட வேடம் என்று திமுக விமர்சித்துள்து.