அரசியல் கட்சிகளுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் - தேர்தல் ஆணையம் அதிரடி
தேர்தலுக்குப் பிறகு திட்டங்களின் பயனாளர்களை கணக்கெடுப்பது என்ற பெயரில் வாக்காளர்களை பதிவு செய்யப் போவதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. வெற்றி பெற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, தேர்தலுக்குப் பிறகு செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கு பயனாளர்களை கணக்கெடுக்கிறோம் அல்லது ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் வாக்காளரின் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்வதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளடது. இத்தகைய செயல்பாடுகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற ஊழல் நடைமுறை என்றும் கூறியுள்ளது. இது போன்று விளம்பரம் செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.