``இதை அரசியல் பார்வையுடன் தடுக்க வேண்டாம்" - தமிழிசை திடீர் வாய்ஸ்
மத்திய அரசின் விஷ்வகர்மா திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளதற்கு, பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இத்திட்டம் நலிவடைந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய கைவினை கலைஞர்களுக்கான வாழ்விற்கும், சாப்பாட்டிற்கும் திண்டாடும் மக்கள், அவர்களுக்கு தெரிந்த தொழிலை ஊக்குவித்து சுயமாக சம்பாதித்து, தான் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்கான திட்டமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை குறுகிய அரசியல் பார்வையுடன் தடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற தேவையற்ற அரசியலில் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
Next Story