உதயநிதி, அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கும் விழாவில்... விஜய் வெளியிட்ட புத்தகம்
48-வது சென்னைப் புத்தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், வரும் 27-ம் தேதி மாலை தொடங்குகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இதுகுறித்து பபாசி தலைவர் சொக்கலிங்கம், பபாசி செயலாளர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். மொத்தம் 17 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுவதாகவும், 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்ட எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல், சென்னை புத்தக காட்சியில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Next Story