இலங்கையில் ரயில் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
இலங்கை பயணத்தின் போது பிரதமர் மோடி வரலாற்று சிறப்பு மிக்க அநுராதபுரத்திற்கு சென்று அங்குள்ள பழமையான போதி மரத்தை வழிபட்டார். பின்னர் புத்த தலைமை பிக்குவிடம் ஆசி பெற்றார். அதன் பின்னர், அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து நவீனமயமாக்கப்பட்ட மாஹோ - ஓமந்தை ரயில் பாதை உள்ளிட்ட ரயில் திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக இலங்கை விமானப்படையின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்று கொண்டார்.
Next Story
