"அதிமுக இதை சொல்வது நான் எதிர்பார்த்த ஒன்று தான்" - அமைச்சர் சேகர் பாபு | DMK
சென்னை தீவுத்திடலில், 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள பெருநகர சென்னை வளர்ச்சி ஆணைய கண்காட்சி அரங்கை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார். சிஎம்டிஏ கண்காட்சி அரங்கு, இந்த ஆண்டு சென்னை, குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் வடிவமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் பல்வேறு சாதனைகளின் அடங்கிய 84 புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்து சமய அறநிலையத்துறை அரங்கையும் அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார்.
Next Story