அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்குமா? - பிரேமலதா சொன்ன தகவல்

x

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், சாக்கோட்டையில் பேட்டி அளித்த அவர், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தேமுதிக மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பின், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்ட அவர், அரசியல் ஆதாயங்களுக்காகத் தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களை பலவீனப்படுத்தக்கூடாது என தெரிவித்தார். இதுவரையிலான அனைத்து ஆதாரங்களும் தென் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நோக்கிலான திட்டமிட்ட நடவடிக்கை என்பதையே காட்டுவதாக அவர் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்