சிபிஐ தேர்தல் அறிக்கை... இது தான் முக்கிய பாய்ண்ட் | Delhi | CPI Manifesto | Election2024
டெல்லியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்ற பாடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலியை 700 ரூபாயாக உயர்த்தவும், வேலை நாட்களை 200 நாளாக உயர்த்தவும் தொடர்ந்து போராடுவோம் என்று கூறப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை அகற்றப்பட்டு நாடு முழுவதும் மக்களுக்கு உகந்த கல்வி முறை கொண்டு வரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.
Next Story