சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சண்முகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் உழைத்ததற்காக கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை சண்முகத்திற்கு தமிழக அரசு வழங்கியதை சுட்டிக் காட்டியுள்ளார். அத்தகைய சிறப்புக்குரிய சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கும், தங்களது பணியை தொய்வின்றி தொடர வாழ்த்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Next Story