#Breaking : அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு... திடீர் திருப்பம்... பறந்த உத்தரவு - கோர்ட் அதிரடி

x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி வருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து பணியாளர், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 2220 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் பாபா முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

அப்போது, நீதிபதி, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம்

சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சம்மன் அனுப்பும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது அரசு வழக்கறிஞர், பலர் முகவரி மாறியுள்ளது. 2000 பேரின் தொலைபேசி எண் மட்டுமே உள்ளது. மற்றவர்கள் பற்றி விசாரித்து வருவதாகவும். யார் யார் எந்த பணிமனையில் உள்ளார்கள் என்பது தொடர்பாக விசாரித்து சம்மன் அனுப்புவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, விசாரணை விரைவு படுத்தும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, விசாரணை டிசம்பர் 16 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்