ராகுல் தலையில் விழும் அடித்த அடி... NDA -வுக்கு தாவும் அடுத்த முக்கிய தலை?

x

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. 2019இல் மகாராஷ்டிராவில் சிவசேனா அடங்கிய பாஜக கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சிவசேனா ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் உத்தவ் தாக்கரேவை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் பாஜக தலைமை இறங்கியுள்ளது. இது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய

அமைச்சர் ஒருவரையும் களம் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக அவரது அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்