காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு - சென்னையில் பெரும் பரபரப்பு | Congress

x

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். போலீசார் ஊர்வலமாக சென்று மனு அளிக்க அனுமதி மறுத்ததால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்