காலையில் எழுந்ததும் விஜய்க்கு அடி இல்ல பேரிடி.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

x

தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில் அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான சின்னங்கள் பதிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆர்.கே நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர் டி ஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்.அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரளா மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்று உள்ளது. மேலும் வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்